anugrahavision.com

IMG 20260806 WA0051
WhatsApp Image 2026 07 25 at 10.04.50 AM

சேகரிப்பில் குழந்தைக்குப் பெயர் சூட்டி மூன்று முறை சொன்ன எஸ்.பி. வேலுமணி

எஸ்.பி. வேலுமணி வாக்கு சேகரிப்பு-குழந்தைக்குப் பெயர் சூட்டி மகிழ்வுகோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி மற்றவராயபுரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருக்குப் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மேளதாளங்கள் முழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வாக்கு சேகரிப்பின் போது பேசிய எஸ்.பி. வேலுமணி, தொண்டாமுத்தூர் தொகுதியில் தார் சாலை, மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் திட்டங்களையும் சிறப்பாகச் செய்து தந்துள்ளதாக குறிப்பிட்டார்.

பிரசாரத்தின் போது, அப்பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தங்கள் பெண்குழந்தைக்குப் பெயர் சூட்டுமாறு கேட்டுக்கொண்ட நிலையில், அந்த அழகிய குழந்தைக்கு ‘சாதனா’ எனப் பெயரிட்டு மகிழ்ந்தார் வேலுமணி…

Spread the News

Leave a Comment

IMG 20260806 WA0051